“Deiva Thirumagal”-Review

என்னை பாதித்த படங்களின் வரிசையில் “தெய்வத்திருமகள்” Cast: Vikram, the little girl “Sara”, Anushka, Amala Paul, Santhanam, Nasser and others

Storyline:

Media_httpviduraghufi_kabgg

[/caption]

 • A heart touching story of love btw a mentally retarded father(vikram) and a normal daughter(sara)
 • The first half is taken in lovely locales of ooty with a beauutiful song ஆராரோ ஆரிரரோ …. and of how vikram brings up his daughter till 5 yrs of her age.
 • Vikram loses his daughter to amala paul who happened to be his sister-in-law. He’s left all alone in the road…
 • The second half is the battle of how he gets back his daughter…Anushka comes to rescue vikram to get back his daughter.
 • Anushka and Nasser(lawyers) have portrayed their roles very well….Everybody has done justice to their role….
 • The comedy is attached very much to the story…. no separate track for it as in other commercial films…
 • Vikram has worked really hard in this film that too in the scene where vikram make nasser realise that he has not taken care of his kid properly.
 • Also, the court sequences where he will not be able to answer for nasser’s questions…
 • The ending might be heavy but a realistic one…..
 • Kudos to the director for he has taken a different story and experimented it with a wonderful actor vikram..
 • Kudos to the whole film team and the unit….Spl congratulations to vikram….
 • Cinematography is too good especially -it is shown in the song in the second half with anushka…
 • Songs are soothing…Inspite of a weekday… it was a housefull show…
 • Felt happy and a soul stirring film…in a way some sort of satisfaction….
 • Such a love bondage btw  dad and a daughter!!

P.N: Just my opinions/views abt the film. There is nothing to hurt others in it!

Advertisements

My next tamil story-சுகமான நினைவுகள்

வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா……………………!
சுகமான நினைவுகள்

இளங் காலைப் பொழுதில் கோமளா எழுந்து குளித்து தன் வீட்டு வாசலை கோலம் போட்டு அலங்கரித்துக் கொண்டு இருந்தாள். மகள் ரேவதி படுக்கையை விட்டு எழுந்து இருக்கவில்லை. மகன்  சுந்தர் எழுந்து தன் உடற்பயிற்சியை முடித்து விட்டு அப்பா ராஜனுடன் வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தான். அப்பொழுது தான் தன் தங்கை ரேவதி படுக்கை அறையில் இருந்து எழுந்து வந்தாள். தன் அம்மா கோமளா தயாரித்து வைத்து இருந்த காபியை குடித்து விட்டு குளியலுக்கு சென்று விட்டாள்.

சுந்தர் தன் வேலையை பற்றி ராஜனிடம் சிறிது நேரம் பேசி விட்டு தன் வேலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். ராஜன் தனக்கு வயது ஆகி விட்ட காரணத்தினால் விருப்ப ஓய்வு குடுத்து வேலையில் இருந்து விலக முடிவு எடுத்து விட்டார். மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டதால் அவர் அம்முடிவை எடுத்தார். சுந்தரும் நன்கு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான்.

ரேவதி கல்லூரியில் இறுதி ஆண்டு பி.காம். படித்துக் கொண்டு இருந்தாள். அவள் மிகவும் நன்றாகப் படிப்பாள். அவளுக்கு மேலும் படிக்க ஆசை. தன் ஆசையைப் பற்றி அவள் தன் பெற்றோரிடம் கூறினாள். கோமளாவும்  ராஜனும் முதலில் சற்று யோசித்தாலும் பிறகு அவள் மேற்படிப்புக்கு சம்மதித்தனர். ரேவதிக்கு மிகவும் சந்தோஷமானது. அவள் மேற்படிப்பை பற்றி சுந்தருடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுத்தாள்.

இதற்கு நடுவில் சுந்தருக்கு தன் வேலையில் வெளிநாடு போவதற்கான வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது. அவன் துள்ளிக் குதித்தான். அதைப் பற்றி தன் பெற்றோர்களிடம் கலந்துரையாடி ஒரு நல்ல முடிவை எடுத்தான். ரேவதி தன் மேற்படிப்பைத் துவங்கி இருந்தாள். சுந்தரும் வெளிநாடு சென்று இருந்தான்.

கோமளாவும், ராஜனும் முதலில் சற்று சங்கடப் பட்டனர். பிறகு இரண்டு பேறும் சேர்ந்து நிறைய கோவில்களுக்குச் சென்று வர ஆரம்பித்தனர். தன் பிள்ளைகளின் சம்மதம் வாங்கி ரேவதிக்கு வரன் தேட ஆரம்பித்தனர். சுந்தர் வெளிநாடில் இருந்து வந்தவுடன் ரேவதியின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என  தீர்மானித்தனர். அதனால் கோமளாவும், ராஜனும் சுறுசுறுப்பாக வரன் தேடுவதில் மிக தீவிரமாக இறங்கினர்.

நாட்கள் சென்ற வேகத்தில் இரண்டு வருடங்கள எங்கே போயிற்று என அவர்களுக்கே தெரியவில்லை. ரேவதி நன்கு படித்து முடித்து அந்த மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றாள். சுந்தரும் வெளிநாட்டில் இருந்து வருவதாக அறிவித்தான். இதற்கு நடுவில் கோமளாவும், ராஜனும் வரன் தேடிய தீவிரத்தில் ஒரு வரன் நன்றாக அமையும்படி வந்தது. விசாரித்ததில் பையன் பெயர் நந்தகுமார் என்றும் அவன் நல்ல வேலையில் உள்ளதாகவும் தெரிய வந்தது. அவர்களுக்கு நன்கு விசாரித்ததில் எல்லாம் திருப்திகரமாக அமையவே நந்தகுமாரையே ரேவதிக்கு கல்யாணம் முடிக்கலாம் என தீர்மானித்தனர். ரேவதிக்கும் அப்பையனை பிடித்து போயிற்று.

சுந்தரும் தன் கூட வேலை செய்கின்ற பெண் ஸ்ருதியை பிடித்து இருக்கிறது என தன் பெற்றோர்களிடம் தெரிவித்தான். இரு குடும்பத்தாரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்தனர். கோமளாவும், ராஜனும் மிகவும் சந்தோஷப் பட்டனர். அவர்கள் எல்லோரிடமும் கலந்து பேசி இரு திருமணங்களையும் ஒரே நாளில் வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்தனர். அதனால் எல்லோரும் அவர்கள் வேலைகளில் தீவிரமாக இருந்து விட்டனர்.

இதற்கு இடையில் திடீரென்று ஒரு நாள் சுந்தரின் ஞாபகம் வந்தது. சுந்தர் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஏன் இன்னும் வரவில்லை என ஒருவரை ஒருவர் கேள்விக் கேட்டு கொண்டனர். அவனுக்கு பேசலாம் என போன் செய்தால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. எல்லோருக்கும் பதற்றம் பற்றிக் கொண்டது.எங்கு தொடர்பு கொண்டாலும் சரியான பதில் கிடைக்க வில்லை.

இரு தினங்கள் கழித்து சுந்தர் நல்ல படியாக வந்து  சேர்ந்தான். மற்றவர்கள் இருந்த நிலையில் சுந்தரை பார்த்தவுடன் அழுவதா அல்லது சிரிப்பதா எனத் தெரியவில்லை. எல்லோரும் அவனை ஒருவர் பின் ஒருவராக  கேள்விக் கேட்டு விட்டு தான் சமாதானம் ஆயினர். அதற்கு அவன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்ததாக விவரித்தான். சுந்தர் நல்ல படியாக வந்து சேர்ந்து விட்டதை  எல்லோருக்கும் தெரிவித்து விட்டு கல்யாண வேலைகளை சந்தோஷமாக செய்ய ஆரம்பித்தனர்.

சில நாட்கள் சென்றவுடன் குறித்த முஹுர்த்தத்தில் இரு கல்யான்னகளையும் மகிழ்ச்சியாக  நடத்தி வைத்தனர். கோமளாவும், ராஜனும் பரமானந்தித்தனர். அவர்களுக்கு சந்தோஷம் கறைக் கொள்ளவில்லை.

சுந்தர்-சுருதி, ரேவதி-நந்தகுமார் அவர் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் கரை புரண்டு ஓட எங்கள் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்……….!!