கமலத்தின் மனத்திட்பம்(அ) உறுதி:My Second story

இளம் காலைப் பொழுதில் கமலம் எழுந்து வாசல் தெளித்துக் கொண்டு இருந்தாள். அவள் சித்தி சரோஜா கமலத்தை அவள் எழுந்த பொழுதில் இருந்து வேலை வாங்கிக் கொண்டு இருந்தாள். கமலமும் அலுக்காமல் வேலை செய்தாள். சரோஜா கமலத்தை தன் பெண் என்ற நினைப்பு கூட இல்லாமல் சதா அவளை திட்டிக் கொண்டு இருந்தாள்.

சரோஜா கமலத்தின் அப்பா நடராஜனுக்கு இரண்டாவது மனைவியாக வந்தாள். கமலத்தின் அம்மா புற்று நோயால் பாதிக்கப் பட்டு இறந்து போனாள். கமலம் சிறு குழந்தையாக இருந்ததால் நடராஜன் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் அவர் நினைத்த படி சரோஜா இருக்கவில்லை. அதற்கு நேர் மாறாகத் தான் நடந்து கொண்டாள். வேறு வழி இல்லாமல் சகித்துக் கொண்டார்.

நடராஜன் ஒரு மில்லில் மேலாளராக பணி புரிந்துக் கொண்டு இருந்தார். அவர் கமலத்தின் மேல் மிகவும் பாசமாக இருந்தார். சரோஜாவிற்கு கமலத்தைக் கண்டால் ஏனோ ஆகவில்லை. தன் குழந்தை சதீஷ் வந்தவுடன் கமலத்தை ஏளனமாக பார்க்கத் துவங்கி விட்டாள். கமலம் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தாள். அதனால், கமலம் சித்தியின் சொற்களை கண்டு கொள்வதில்லை.

கமலத்திற்கோ சதீஷின் மீது கொள்ளைப் பிரியம். சதீஷும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவனும் கமலத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தான். கமலத்தை சரோஜா ஏதாவது சொன்னால் சதீஷ் அவளுக்காக பரிந்துக் கொண்டு பேசுவான். மிக நல்லத் தோழன் கிடைத்தது போல் உணர்ந்தாள் கமலம்.

கமலம் பள்ளி இறுதித் தேர்வில் நன்கு தேர்ச்சிப் பெற்றாள். பிறகு, கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். வீட்டிலும் தன் சித்தி சரோஜாவிற்கு உதவி செய்துவிட்டு பகுதி நேர வேலைக்கும் போய்க் கொண்டு இருந்தாள். கமலம் உறுதியான மனத்திட்பம் வாய்ந்தவளாக  இருந்தாள். அதனால் சரோஜாவின் வார்த்தைகள் அவள் மனதை தொடவில்லை. கல்லூரியின் இறுதி ஆண்டில் அவள் நன்கு தேர்ச்சிப் பெற்று தான் படித்த கல்லூரியில் முதலாவதாக வந்தாள்.

நடராஜனும் சரோஜாவும் மிகவும் பெருமிதம் கொண்டனர் கமலத்தைப் பற்றி. சரோஜாவிடம் பெற்ற பாசம் இல்லாவிடிலும் கமலத்தை அவள் வளர்த்த பாசம் ஆட்கொண்டு இருந்தது. கமலமே ஆச்சரியப் பட்டு போனாள் சரோஜாவைப் பார்த்து.  மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தில் ஆழ்ந்தது.  அன்றில் இருந்து சரோஜா மிகவும்  மாறி இருந்தாள். கமலத்தை அதிக அளவு வேலை வாங்குவதில்லை. வேலைகளை அவ்விரண்டு பேரும் சமமாக பங்கிட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆதலால், இனி அக்குடும்பத்தில் “எல்லாம் இன்பமயம்” என்ற ரூபத்தில் மகிழ்ச்சி வெள்ளம் திளைத்தது.

Advertisements