கோலங்கள்

வாசலில் கோலமிட மிகவும் பிடிக்கும். அந்த காரணத்திர்கேன்றே காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்.

பெரிய கோலமென்றால் மிக்க இஷ்டம். உதாரணத்திற்கு இதோ என் கோலங்கள்:

Media_httpviduraghufi_gvpir

No.1

Media_httpviduraghufi_hpzsg

No.2

Media_httpviduraghufi_ckckp

No.3

கைபேசிஇல் புகைப்படம் எடுத்ததால் சிலதை மட்டுமே எடுக்க முடிந்தது.

Advertisements

எனக்கு மிகவும் பிடித்த/பாதித்த நாவல்:

என் முதல் தமிழ் பதிவு..

எனக்கு பிடித்த பொழுது போக்குகளில் ஒன்று தமிழ் நாவல்களை வாசிப்பது…

நான் அண்மையில் படித்த கதை ஒன்று ஜீ.ஏ. பிரபாவின் “காதல் வைபோகமே”.
கதை சுருக்கம்:
ஏர்போர்ட் க்கு  பின்புறம் இருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அஞ்சு நபர்கள் உள்ள குடும்பம் அங்கு குடியேறுகிறது. அந்த குடியிருப்பின் காவலாளியும் அவர் வளர்த்த மகன் பரணியும் அந்த குடும்பத்திற்கு உதவிட வந்தனர்.  அக்குடும்பத்தின் இரண்டாவது பெண் தான்  கதையின் நாயகி. முதல் பெண் கௌரிக்கு  திருமணமாகி பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் அவளுடய புருஷன் சந்திரன் தன அம்மாவின் சொற்பேச்சை கேட்டு தன மனைவியை அவள் அம்மா வீட்டிற்கு அனுப்புகிறான்.
பவானி முதுகலை பட்டப்படிப்பு படிக்கச் கல்லூரியில் சேர்கிறாள். அங்கு தன வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒரு பணக்காரன். அவன் அவளை காதல் என்கிற பெயரில் வாட்டி எடுத்து கொண்டிருந்தான்.  ஆனால் பவானியோ தன நாட்டம் படிப்பில் மட்டும் தானே தவிர மற்ற எதிலும் இல்லை என்று சொல்லி அவனை தவிர்த்தாள். பவானியின் தங்கை லக்ஷ்மி பள்ளியில் படித்து கொண்டு இருந்தாள்.
கௌரி அவ்வளவாக படிக்க வில்லை.அதனால்  தினம்தோறும் அழுது புலம்பி கொண்டு இருந்தாள் மனதில் தைரியம் இல்லாமல். இதற்கு நடுவில் அவர்கள் அப்பாவிற்கு மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு  உதவிட பரணி வந்தான். அனைத்து முதலுதவியும் செய்தான். அப்பொழுது பவானி பரணியை தெய்வம் போல பாவித்து நன்றி சொல்கிறாள். பவானி விளம்பர துறையில் கால் ஊன்ற தொடங்குகிறாள். வாய்ப்புக்கள் அவளை தேடி வர ஆரம்பிக்கின்றன. அவ்வபொழுது பவானிக்கு வாழ்த்து அட்டை அனுப்புகிறான் பரணி  அவன் பெயரை வெளியிடாமல். என்ன நடந்தாலும் அவள் முகத்தில் எதையும் காட்டி கொள்வதில்லை.
தன் அக்கா கௌரிக்கு ஒரு வழி பிறந்திட அவளை வேலைக்கு செல்லும்படி சொல்கிறாள் பவானி.
ஆனால் கௌரியோ தற்கொலை முயற்சி செய்து பிறகு அதில் இருந்து மீண்டு வந்து ஒரு தெளிவான முடிவை எடுக்க துணிந்தாள். தன கணவரை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய சொல்லி கணவனிடம் தான் குறை என்று கண்டுபிடித்து அதை சரி  செய்தாள். கௌரிக்கு வளைகாப்பு நடக்க இருந்தது. பரணி அவள் அக்காவிற்கு தங்க வளையல் வாங்கி வந்து இருந்தான். அதை பார்த்தவுடன் எல்லோரின் முகத்திலும் சந்தோசம் நிரம்பி இருந்தது. பவானிக்கு பேச்சே எழும்ப வில்லை. பரணிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை.
பவானியின் தங்கை லக்ஷ்மி  படித்து கொண்டு இருந்த பள்ளியில் அவள் பின் ஒரு மாணவன் சுற்றி கொண்டு இருந்தான். திடீரென்று ஒரு நாள் அம்மாணவன் லக்ஷ்மியின் மேல் திராவகத்தை ஊற்றி விட்டான். முகம் எல்லாம் வெந்து விட்டது. ஆனாலும் அவள் தன்னம்பிக்கையை விடாமல் நன்கு படித்து பொது தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்து சாதித்து காட்டி விட்டாள்.
பவானியின் கல்லூரியில் அப்பணக்காரப் பைய்யன் அவள் நிம்மதியை கெடுத்து கொண்டு இருந்தான்.
கடைசியில் அவன் தற்கொலைக்கு முயற்சி செய்தான். அப்பொழுது தான் அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என தெரிந்தது பவானிக்கு. அவன் பாசத்துக்காக ஏங்கி கொண்டு இருந்தான். பவானி அவனிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்து காதல் என தப்பாக புரிந்து கொண்டான். பணக்காரன் ஆகையால் கவனிக்க ஆளில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு அப்பையனின் பெற்றோர் அதை புரிந்து கொண்டு அவனை கவனிக்க தொடங்கினர். அவர்கள் பவானிக்கு நன்றி கூறி அவளுக்கு ஒரு நல்ல இடத்தில வேலை வாங்கி தந்தார்.
பவானியின் அக்காவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.. அப்பொழுது சந்திரன் நினைத்து கொண்டான் இப்பெண்களுக்கு கோவ தாபங்கள் எல்லாம் வராதா மற்றும் அவர்கள் அன்பை மட்டும் பொழிய தெரிந்தவர்கள் என்று. பவானியின் அம்மா அவளை பரணியை கணவனாக ஏற்க சம்மதிப்பாளா என்று கேட்டாள். பிறகு சொல்கிறேன் என்று வெளியில் வந்து விட்டாள் பவானி. வெளியில் வந்து பார்த்தால் பரணி அவளுக்காக  நின்று கொண்டு இருந்தான். அப்பொழுது பரணி அவள் விருப்பத்தை கேட்டான். வாழ்த்து அட்டையை பற்றி அவன் பவானியிடம் அப்பொழுது தான் சொன்னான். பரணியின் கேள்விக்கும் அவன் பாணியிலேயே விடை தந்து அவனுக்கு இன்ப அதிர்ச்சி தந்தாள்.
இக்கதை என் மனதில் நற் சிந்தனைகளையே ஊக்குவித்தன.
இக்கதையை படித்தவுடன் மனதில் ஒருவித சந்தோசம் ஊற்றெடுத்தது ஏனெனில் வாழ்க்கையில் நடப்பவற்றை ஏற்றுக்கொண்டு எல்லாவற்றையும் நன்மைக்கே என சிந்தித்து வாழ்கையில் ஜெயித்து காட்டி விட்டாள் பவானி.. நாமும் நம் வாழ்க்கையில் இதை போல ஜெயித்து காட்டலாமே.
.
வெற்றி நமதே….
பின் குறிப்பு: தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்… கோர்வையாக வந்து இருக்கிறதா என்று தெரிய வில்லை… என் தோழி கிருத்திகாவிற்கு மிக்க நன்றி தமிழ் ஆன்லைன் எடிட்டர் பற்றி  சொன்னதற்கு. திருத்தம் இருந்தால் வரவேற்க படுகின்றன.